மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குலதெய்வ நேர்த்திக் கடன், உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற இன்று நல்ல நாள். நல்ல விஷயங்கள் கைகூடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் மனது முழுக்க இருக்கும். இன்பத்தோடு இந்த நாளை செலவு செய்வீர்கள். குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பேசி சந்தோஷத்தோடு இந்த நாளை கழிப்பீர்கள். வேலையில் டென்ஷன் குறைவாக இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் வாங்க கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய பெயர் நிலைத்து நிற்கும். புகழின் உச்சிக்கு செல்வீர்கள். சில பேருக்கு வெளியூர் பயணங்கள் ஏற்படும். சுப செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மனதிற்கு இதமான நாளாக இந்த நாள் அமையும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கரையும். வேலையில் உங்களுடைய ஆர்வம் அதிகமாக காணப்படும். மேலிடத்தில் நல்ல பெயரையும் வாங்குவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை புது முடிவு எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலீட்டிலும் கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் நடந்து முடியும். உங்களுக்கு பெருசாக டென்ஷன் இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாள். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் பேச தொடங்கலாம். சுப செலவுகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். கவலையை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டே இருக்க மாட்டீர்கள். போனது போகட்டும் என்ற மனப்பான்மை உங்களுக்குள் இருக்கும். அந்த மனப்பான்மை இந்த நாளை இன்னும் அழகாக்கி கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசி காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். எடுத்த வேலையை முடித்துவிட்டு தான் மூச்சு கூட விடுவீர்கள். அந்த அளவுக்கு காரிய வெற்றி இந்த நாளில் கை கொடுக்கப் போகிறது. ரொம்ப நாளா முடிக்கவே முடியாத வேலைகள் ஏதாவது இருந்தால் அதை இன்று கையில் எடுத்து முடித்து விடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் பெருகும் நாளாக அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் லட்சுமி கடாட்சம் உயரக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். சந்தோஷம் இருக்கும். விருந்தாளி யினர் வருகை மனதிற்கு நிம்மதியை தரும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று தேவையில்லாத வேலையில் தலையிடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். தேவையற்ற பகை எதிரி தொல்லை உருவாக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் கைகலப்பில் ஈடுபடக் கூடாது. பொறுமை நிதானம் அவசியம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எதிலும் அவசரப்படாமல் உங்களுடையமனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். அடுத்தவர்கள் மனது நோகாமல் நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வுஎடுக்கக் கூடிய நாளாக இருக்கும். தலைக்கு மேல் வேலை இருந்தாலும் கொஞ்சம் உடல் சோர்வு உங்களை ஓய்வெடுக்க சொல்லும். கவலைப்படாதீங்க எல்லாம் நல்லபடியாக நடக்கும். புதிய மனிதர்களின் வருகை புது நண்பர்களின் சேர்க்கை உங்களுக்கு இன்று நன்மையை செய்யும்.
Tags:
Rasi Palan