நவகிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி பெற்றவை. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசிகளை மாற்றுவதுடன், சில நேரங்களில் வக்ர நிலையில் பின்னோக்கிச் செல்லும் அதிசயத்தையும் காண முடிகிறது.
இந்த சூழலில், ஜூலை மாதம் 2025-ல் ஒரு அரிய, தற்செயல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதாவது, நான்கு முக்கிய கிரகங்கள் ஒரே நேரத்தில் வக்ர நிலையில் பயணிக்க உள்ளன.
இது கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அபூர்வ நிகழ்வாகும். இதனால் 3 ராசிகள் பெரும் அதிஷ்டத்தை பெறப்போகின்றது அதை இங்கு பார்ப்போம்.
கடக ராசிக்கு நன்மை
ஜூலை மாதத்தில் 4 கிரகங்கள் வக்ரமாக நடமாடுவது கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்; திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். தொழிலில் புதிய திட்டங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தன்னம்பிக்கை, தகவல் தொடர்பு திறன் மேம்படும். பண சேமிப்பு சாத்தியம் அதிகம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
ரிஷபருக்கு வருமானமும் மதிப்பும் அதிகரிக்கும்
ஜூலை மாத வக்ர கிரக இயக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலநலன்களை தரும். வருமானம் உயரும், வேலைவாய்ப்பில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் விரும்பும் வாழ்க்கைத்துணையை சந்திக்க வாய்ப்பு. கூட்டு வணிகத்தில் லாபம் பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகும். சமூகத்தில் புகழும், மரியாதையும் அதிகரிக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு நன்மைகள்
ஜூலை மாதம் 4 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், மீன ராசிக்காரர்கள் கடனிலிருந்து விடுபடுவார்கள். புதிய முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்; திருமணமாகாதவர்கள் நல்ல துணையை காண்பர். வணிக விரிவாக்க திட்டங்கள் வெற்றி பெறும். நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்கான வாய்ப்பு பெறுவர். தைரியம், வீரமும் அதிகரிக்கும்.
Tags:
Rasi Palan