இன்றைய ராசிபலன் - 08.07.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தவறாக புரிந்து, பிரிந்து வாழக்கூடிய கணவன் மனைவி கூட இன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும் நாள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல காரியங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். முன்கோபத்தை குறைத்து பக்குவமான மனிதர்களாக செயல்படுவீர்கள். சேமிப்பு கூடும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. இறை வழிபாடு செய்வது மனதிற்கு நிம்மதியை தரும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று மன நிம்மதியோடு இருப்பீர்கள். உங்கள் கடமைகளை சரியாக செய்வீர்கள். நீண்ட நாள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வீண்பழி விளக்கக்கூடிய நாள். எதிரி தொல்லை விளக்கும். சந்தோஷம் இருக்கும். வீன் செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகரிப்பது நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். வெளியிடங்களுக்கு சென்றால் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்‌ தேவையற்ற விஷயங்களை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். கடவுள் உங்களுக்கு நன்மையை மட்டும் தான் செய்வான் என்று நம்பினாலே போதும். இந்த நாள் இனிய நாளாக அமையும்

சிம்மம்


சிம்ம ராசி காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். உடல் உபாதைகள் வரும். வேலையில் முழுசாக கவனம் செலுத்த முடியாது. கடை வைத்திருப்பவர்களாக இருந்தால், வியாபாரத்தை சரிவர கவனிக்க முடியாது. எல்லாம் கண் திருஷ்டி தான். கொஞ்சம் திருஷ்டி சுற்றி போட்டுக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும். துர்க்கை அம்மனை கும்பிடுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வரும். எடுத்திருந்து பேசுவீர்கள். புதிய எதிரிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நிதானமாக நடந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுபம். வீட்டில் தடைப்பட்டு வந்த நல்ல காரியங்களை மீண்டும் துவங்கலாம். வீட்டிற்கு தேவையான மங்களப் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேளையிலும் வியாபாரத்தையும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றி அடையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். அடுத்தவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலையில் உங்களுடைய பெயரை நிலை நாட்ட அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற நல்ல பெயரும் கிடைக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது முதலீடுகளை செய்யலாம். நினைத்தபடி லாபத்தை எடுக்கலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் என்று அமைதியாக நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்களை பற்றி கவலைப்பட மாட்டீர்கள். மூன்றாவது நபர்களின் பேச்சுக்கு செவி சாய்க்காமல் இருப்பது, உங்கள் வாழ்க்கைக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அதிகமாக இருக்கும். யாரை நம்புவது, யாரை நம்ப கூடாது என்ற குழப்பம் சில பேருக்கு வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். இறைவனின் மீது பாரத்தை போட்டு இந்த நாளை கடந்து செல்லுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையை முடித்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சுயநலவாதியாகவும் செயல்படுவீர்கள். அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். இதனாலேயே சில பல, சின்ன சின்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகம் வரும். உறவுகளோடு வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது, ஜாக்கிரதையாக இருக்கவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். இன்று மனதை அமைதியாக வைத்துக்கொள்ள மனதிற்கு பிடித்த பாடலை கேட்கவும்.
Previous Post Next Post


Put your ad code here