யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் கடமையேற்பு..!!!


யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கைலாயபிள்ளை சிவகரன் இன்றைய தினம் (01.07.2025) காலை 08.45 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

மேலதிக அரசாங்க அதிபராக கடமையேற்ற கைலாயபிள்ளை சிவகரன் முன்னர் வேலணை பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here