கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிர்மாய்ப்பு..!!!



கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர், விசாரணை கூண்டில் உயிர் மாய்த்து கொண்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், இன்றைய தினம் (25.07.2025) குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவர், விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் 12.00 மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு உயிர் மாய்த்து கொண்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என்ற 66 வயதுடைய குறித்த சந்தேக நபர், கிளிநொச்சி தொடருந்து நிலைய வீதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here