
அக்கரைப்பற்று, மீரா ஓடை பகுதியில் இன்று (16) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மீரா ஓடை குளத்தில் நேற்று (15) இரவு, 2 வயது ஆண் குழந்தை ஒன்று வீழ்ந்து உயிரிழந்ததையடுத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த குளத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி, அப்பகுதி மக்களால், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று குளத்தில் வீழ்ந்த குழந்தையை மீட்டு அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதித்த போதும், அந்த குழந்தை உயிரிழந்தது.
இந்த நிலையில் உயிரிழந்த குழந்தைக்கு இன்றைய தினம் (16) பிறந்தநாள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த குளத்தில் ஏற்கனவே 2 சிறுவர்கள் வீழ்ந்து உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:
sri lanka news