நயினாதீவு தேர்த்திருவிழா நாளை..!!!


வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது.

அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர்.

அதனை தொடர்ந்து காலை 09 மணிக்கு தேரில் வெளிவீதியுலா வந்து காலை 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடையும். மாலை 04 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும்.

நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி , காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி , 7.30 மணிக்கு தீர்த்தோற்சவத்திற்கு அம்பாள் புறப்பட்டு செல்வார்.

அதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள் , பேருந்து சேவைகள் இடம்பெற்று வருவதுடன் , சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படையினர் , சாரணர்கள் , செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here