மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை கிடைக்காத மரியாதை, மரியாதையே கிடைக்காத ஒரு இடத்தில் இருந்து, இன்று உங்களை தேடி வரப்போகிறது. அவமானப்படுத்தியவர்கள் எல்லாம் கூட உங்களுடைய நல்ல மனதை புரிந்து கொண்டு, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பார்கள். நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிறைய நல்ல அனுபவங்களை பெறக்கூடிய நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு வட்டாரங்கள் விரிவடையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய நண்பர்களின் நட்பு நல்ல பழக்க வழக்கங்களை உங்களுக்குள் கொண்டு வந்து சேர்க்கும். பிரச்சனை வரும்போது கை கொடுக்க உறவுகளும், நண்பர்களும் வரிசை கட்டி நிற்பார்கள். மனநிறைவை அடைவீர்கள். சுற்றி இருப்பவர்களுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்வீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வங்கி கடன்கள் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஒரு பயம் கலந்த பதட்டம் இன்று மனதில் இருக்கும். ஆனால் இறைவனின் ஆசிர்வாதம் இன்று உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. நல்லதே நடக்கும். ஆகவே பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு, வேலைகளை செய்ய துவங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். வம்பு சண்டைக்கு செல்லக்கூடாது. தேவையற்ற பகை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் யாராவது ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும். வாக்குவாதம் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூட நிதானம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த தலைகள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெளிவாக இருப்பீர்கள். எந்த நேரத்தில் எந்த முடிவை எடுப்பது என்பதில் எந்த ஒரு குழப்பமும் வராது. வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் பெரிய அளவில் வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். இறைவனின் பரிபூரண அருள் பெற்ற நாள் இன்று.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று நல்லது நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். விவசாய தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று தைரியமானவர்களாக வலம் வரப்போகிறீர்கள். மன உறுதியோடு செயல்படுவீர்கள். யாரை கண்டும் அஞ்ச மாட்டீர்கள். உங்களுடைய பேச்சில் ஒரு தெளிவு இருக்கும். எதிரிகளை பந்தாடுவதற்கு இந்த நாள் சரியான நாள். நிதிநிலைமை உயரும். கடன் சுமைக்குறையும் மன நிம்மதியும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். செய்த தவறுகளை எல்லாம் நீங்களே திருத்திக் கொள்வீர்கள். வேலையில் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பீர்கள். வியாபாரத்தில் விட்ட இடத்தை திரும்பவும் பிடிப்பீர்கள். உங்களை விட்டுப்போன பணம் பதவி அந்தஸ்து எல்லாம் மீண்டும் உங்களைத் தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமை மிக மிக அவசியம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. யாரிடமும் முன் கோபத்தை காட்டக் கூடாது. சின்னதாக செய்யக் கூடிய ஒரு முயற்சியாக இருந்தாலும் அதில் அக்கறை இருக்க வேண்டும். நிறைய முதலீடை செய்ய வேண்டாம். பெரிய அளவில் பணம் கொடுத்து எந்த ஒரு பொருளையும் வாங்காதீங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சில வந்து போகும். ஆனாலும் கவலை வேண்டாம். பெரிய அளவில் வீண் விரைய செலவு இருக்காது. வரக்கூடிய செலவுகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஆதாயமாகத்தான் இருக்கும். மற்றபடி வேலையிலும் வியாபாரத்தையும் சுமூகமான போக்கே நிலவும்.
Tags:
Rasi Palan