யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் , வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவிக்கு காய்ச்சல் காரணமாக கடந்த 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மாணவி சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.