மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகள் செய்யாதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். வேலையில் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் உங்களுடைய சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருக்க வேண்டும். இன்று வரக்கூடிய பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் பொறுமை அவசியம் தேவை. முன்கோபம் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பல நன்மைகள் உங்களைத் தேடி வரப்போகிறது. மனதிற்கு நிம்மதி கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். தேவையில்லாத நட்பு, மற்றும் உறவுகள் உங்களை விட்டு தானாக விலகி விடும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உங்களுடைய பிரச்சனைகளை மேல் அதிகாரிகள் சரியாக புரிந்து கொள்வார்கள். உங்களுடைய பிரச்சனைக்கு உண்டான தீர்வையும் கொடுப்பார்கள். மன நிம்மதி அடைவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன உறுதியோடு இருக்க வேண்டும். சின்ன சின்ன தோல்விகளை கண்டு துவண்டு போகக்கூடாது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை தரும் என்பதை மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்ளுங்கள். வேளையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையில் முழு ஆர்வம் செலுத்த முடியாது. எதிரிகள் தொல்லை வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூடுமானவரை அன்றாட வேலைகளை, நாளை என்று சொல்லி தள்ளிப் போட வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். தேவையற்ற மன குழப்பத்தில் இருந்து வெளிவருவீர்கள். கணவன் மனைவி சண்டை சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. நிறைய ஷாப்பிங் போகாதீங்க. யாரை நம்பியும் பணம் கொடுக்காதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீட்டிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றபடி வேலையில் பெருசாக பிரச்சனைகள் இல்லை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏதோ ஒரு மன பயம், மனப்பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். மன பயத்திலிருந்து வெளிவர ஐந்து நிமிடம் தியானம் செய்து பாருங்கள். பதட்டத்தோடு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பதட்டத்தைக் குறைக்க முதலில் உண்டான வழியை தேடுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை கொஞ்சம் இருக்கும். பழைய கதைகளை எல்லாம் நினைத்து உங்களை நீங்களே வருத்தப்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இதனால் அன்றாட வேலை கெட்டுப் போகும். ஆகவே மனதை ஒரு நிலைப்படுத்துங்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். புது வேலைகளை துவங்கலாம். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் தானாக உங்களைத் தேடி வரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய பிரச்சனைகளை சுற்றி இருப்பவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மனதை அமைதி கிடைக்கும்.
Tags:
Rasi Palan