யாழ்ப்பாணம், மண்கும்பான் கடற்கரைப் பகுதியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (11) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப் பகுதி மக்களினால் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறைப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.