மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது முழுக்க பக்தி நிறைந்திருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனநிறைவை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது. செலவுகளையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வெளிப்படும் நாள். மனதிற்கு பிடித்தவர்களிடம் உங்களுடைய அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை கை பிடிக்க நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க துவங்கும். சுப செலவுகளும் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதலீட்டில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம் இருக்கும். புது முடிவுகளை சுதந்திரமாக எடுக்க முடியாது. மூன்றாவது நபருடைய கட்டுப்பாட்டின் கீழ் நீங்கள் இயங்குவதற்கான சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் வார்த்தையை நம்பி எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்காதீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்கள் பிரச்சனைகள் பகை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையை இழந்தால் இந்த நாளில் பிரச்சனை தான். நிதானத்தோடு சிந்தித்து செயல்பட்டால் தப்பித்துக் கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமைசாலிகளாக செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகத்தோடு செயல்படுவீர்கள். தந்திரமாக உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்துக் கொள்வீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும் நாள். காரிய வெற்றி கிடைக்கும் நாள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். விடுமுறை நாள் என்பதால் நல்ல தூக்கம் நல்ல சாப்பாடு நல்ல ஓய்வு கிடைக்கும். அதற்காக அன்றாட வேலையை கூட, நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடக்கூடாது. முக்கியமான வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபம் அதிகரிக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வாழ்க்கை துணை இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொய் பேசிக் கொள்ளக் கூடாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வரா கடன் வசூல் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். இன்று மாலை உறவினர்களோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. கூடவே கையில் இருக்கும் பணமும் கூடுதலாக செலவாகும். பார்த்துக்கோங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் போதும். சுப காரிய பேச்சுக்களை அடுத்த நாள் தள்ளி போடுங்கள். தேவையற்ற தடைகள் தடங்கல் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாக மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். கணவன் மனைவி பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். ஓய்வு எடுப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும். மனைவியோடும் குழந்தையோடும் உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உற்சாகத்தோடு இருப்பீர்கள். சில பேருக்கு விடுமுறை இருந்தாலும் உங்கள் கடமையிலிருந்து தவற மாட்டார்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று இரட்டிப்பு வேலை இருக்கும்.
Tags:
Rasi Palan