இன்றைய ராசிபலன் - 23.08.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வெற்றிவாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது, உங்கள் வீடு தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நிதி நிலைமை சீராகும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். பழைய கருப்பான கஷ்டகாலம் நினைவிற்கு வந்து செல்லும். இதனால் அன்றாட வேலை பாதிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இன்று முக்கியமான வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். மனதை எக்காரணத்தைக் கொண்டும் அலைபாய விடக்கூடாது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியாக நல்ல விஷயங்கள் நடக்கும். இழந்த மன நிம்மதியை மீண்டும் பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். செலவுகள் குறையும் நாள். சேமிப்பிற்கான திட்டங்களை இன்று துவங்கலாம். எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஒரு வாய்ப்பு வரும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் எதிர்காலம் சிறக்கும். புதிய வேலைகளை துவங்க இன்று பிள்ளையார் சுழி போடுங்கள். வாழ்வில் பிரம்மாண்ட வெற்றியை அடைவீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் லாபமாக மாறும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். நிதிநிலைமை உயரும். கடன் சுமை குறையும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். திறமைசாலிகளாக சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். யாராலும் தீர்த்து வைக்க முடியாத சிக்கலை தீர்க்கும் அளவுக்கு உங்கள் திறமை வெளிப்படும் நாள். பெரிய மனிதர்களின் பாராட்டு கிடைக்கும் நாள்.

துலாம்


ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிசாக ஆர்வம் இருக்காது. கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மனது சொல்லும். இதனால் முக்கியமான வேலைகளில் பின்னடைவு உண்டாகலாம். சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தேவையற்ற நண்பர்கள், உறவுகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கு. பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நேரம் கைப்பேசி பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும் ‌

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் புது விஷயங்களை அறிமுகப்படுத்தலாம். பாராட்டுகளும் புகழும் உங்களைத் தேடி வரும் நல்லது நடக்கும் நாள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வேகத்தை விட விவேகத்தோடு நடந்து கொள்வீர்கள். திறமையை வெளிப்படுத்துவீர்கள். சிக்கலான விஷயத்தை கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் வியக்கும் அளவுக்கு உங்களுடைய சாதுரியம் வெளிப்படும் நாள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று சாதனை படைக்கப் போகிறீர்கள். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது. எதிர்பாராத நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நிதி நிலைமை சீராகும்.
Previous Post Next Post


Put your ad code here