மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையில் சின்ன சின்ன பின்னடைவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முக்கியமான வேலைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்தால் போதும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கையில் இருக்கும் சேமிப்பு கரைய வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். யாராலும் செய்து முடிக்க முடியாத பெரிய பெரிய விஷயங்களை கூட சர்வசாதாரணமாக செய்து சாதனை படைப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சக்சஸ் உங்கள் பின்னால் வரும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமுகமான போக்கே நிலவும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்லது நடக்கும். தெரிந்தவர்கள் நண்பர்கள் உறவுகள் மூலமாக நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம் நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். புது மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு தைரியத்தை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வசூல் ஆகாத கடன் தொகை வசூல் ஆகும். சேமிப்பு அதிகரிக்கும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியப் போக்கு வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். தேவையற்ற தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. ஒரு வேலையை மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய சந்தர்ப்பம் அமையலாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்பு கரையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. எதிர்பாராத மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். அந்த மகிழ்ச்சி பெரிய அளவில் மன நிம்மதியை கொடுக்கும். நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கை கூடும். திருமணம் வரை செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்க்கை தான். செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பெயர் புகழ் அந்தஸ்து கூடும். வருமானம் அதிகரிக்கும் உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். இறைவனுக்கு நன்றி செல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று மேன்மையாக நடந்து கொள்வீர்கள். எதிலும் உங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்த மாட்டீர்கள். நண்பர்களுக்கு உறவுகளுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுடைய கஷ்டத்தை புரிந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.
Tags:
Rasi Palan