இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ளது.
திருத்தப்பட்ட விலைகளின்படி, பெட்ரோல் ஒக்டேன் 92 ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 299 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 313 ரூபாவாகவும், லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 283 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், பெட்ரோல் ஒக்டேன் 95 மற்றும் லங்கா மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.