இன்றைய ராசிபலன் - 12.09.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சிகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யுங்கள். நீண்ட நாட்களாக கிடைக்காத பணம் கூட இன்று உங்கள் கையை வந்து சேரும். நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கோடி நன்மைகள் தேடி வரக்கூடிய நாள். சுப காரியங்கள் நடக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் நல்லது நடக்கும். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு அடுத்தவர்களை பார்க்கும்போது ஒரு பொறாமை வரலாம். அடுத்தவர்களுக்கு உங்களை பார்க்கும் போது ஒரு பொறாமை வரலாம். எதுவாக இருந்தாலும் சரி அகல கால் வைக்காதீங்க. புலியை பார்த்து என்றும் பூனை சூடு போட்டுக் கொள்ளக் கூடாது ஜாக்கிரதை.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். கைநிறைய வருமானம் கிடைக்கும். ஏதோ ஒரு வகையில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மன நிறைவு கிடைக்கும் நாள். வேலையில் சுறுசுறுப்பு தேவை. இன்றைக்கான வேலையை ஒருபோதும் நாளை தள்ளி போட வேண்டாம்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். எதிலும் தைரியமாக முடிவு எடுப்பீர்கள். பேச்சில் ஒரு தெளிவு பிறக்கும். செயலில் ஒரு நேர்மை இருக்கும். உங்களை பார்ப்பவர்களுக்கு ஒரு பொறாமை உண்டாகும் அளவுக்கு துறுதுறுன்னு இருக்கப் போறீங்க. பணத்தை மட்டும் கம்மியா செலவு பண்ணுங்க. வீண் விரைய செலவு ஆக வாய்ப்புகள் உள்ளது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். தேவையற்ற டென்ஷன்கள் குறையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன அமைதி கிடைக்கும். வீட்டை சுத்தம் செய்வீர்கள்‌. பழுதான பொருட்களை சரி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் கொஞ்சம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும். பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள் முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. இந்த நாளை ஒரு மணி நேரம் முன்னாடியே துவங்கிடுங்க. தாமதத்தால் சில பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான அப்பாயின்மென்ட் இருந்தாலும், அல்லது ஏதாவது பஸ் ட்ரைன் புக் பண்ணி இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக செல்லுவது நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணம் மிச்சமாகும். வீண் விரைய செலவுகளை எப்படியாவது குறைச்சல்விங்க. அதில் ஒரு சந்தோஷமும் கிடைக்கும்‌. பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். பெரியவர்களுடைய ஆசிர்வாதத்தோடு இன்று நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அவசரப்பட்டு பேசி விடக்கூடாது. உடன் இருப்பவர்களையும் உயர் அதிகாரிகளையும் நண்பர்களையும் அனுசரித்து சென்றால் நல்லது நடக்கும். முன்கோபம்பட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும் ஜாக்கிரதை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திறமையான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீங்க. நீங்கள் எடுக்கும் முடிவுகள் அடுத்தவர்களுக்கு அனுகூலத்தை கொடுக்கும். பெரிய பெரிய பாராட்டுகளும் கிடைக்கும். சில பேருக்கு சம்பள உயர்வு பிரமோஷன் கிடைக்கக்கூட வாய்ப்பு உள்ளது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பீர்கள். சேமிப்பை உயர்த்தலாம். இன்று வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
Previous Post Next Post


Put your ad code here