யாழிற்கு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வழங்கிய நிதியில் பாரிய மோசடி : அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி..!!!


யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் பெறப்பட்ட பல மில்லியன் கணக்கான நிதிகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்று(11) நாடாளுமன்றம் கூடிய நிலையில் பிரதமரிடம் கேள்வி ஒன்றை கேட்ட நிலையில் அர்ச்சுனா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமருக்கு யாழ்.மாவட்ட மக்கள் பெரும் மரியாதை கொண்டுள்ளனர்.

ஆதலால் இதை கூறுகின்றேன், சிங்கள அரசாங்கங்கள் யாழ்.மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என பொய்களை கூறி வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு பல மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது.

இவை சுகாதார அமைச்சரும் நன்கறிவார். ஆனால் அந்த நிதிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

வலி.வடக்கு பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள தெல்லிப்பளை வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட்டு ஆதார வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.

அத்தோடு 2017ஆம் ஆண்டு பரீட்சார்த்த புற்றுநோய் வைத்தியசாலையாக மாற்றப்பட்ட நிலையில் அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கிடையில் எந்தவொரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படவில்லை.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் இந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.இவர் 19 வருடங்களாக யாழ்.மாவட்ட வைத்தியதுறையில் பணியாற்றுகிறார்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை 31,224 பவுண்ட்ஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கு எவ்விதமான புரிந்துணர்வு ஒப்பந்தகளும் இல்லை.மேலும் குறித்த நிதியில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளது.

ஏன் இது தொடர்பில் ஒரு விசாரணை நடத்தவில்லை மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட நபரை பதவியில் வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here