மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாள் வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். எதிர்காலத்திற்கு தேவையான சொத்துக்களை வாங்கலாம். இன்று நல்ல நாளாக இருக்கிறது. இறைவனின் பரிபூரண அருள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கோடி நன்மைகள் தேடி வரும் நாள். நீண்ட நாள் நீங்கள் இழந்த நிம்மதியை மீண்டும் பெறுவீர்கள். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மனதில் இருந்த தேவையில்லாத சந்தேகங்கள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சஞ்சலம் இருக்கும். போட்டி பொறாமைகள் இருக்கும். வேலையில் ஆர்வம் செலுத்த முடியாது. அடுத்தவர்களைப் போல நாமும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று எண்ணாதீர்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்த உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். வியாபாரத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளை கண்டு பின்வாங்காதிங்க. எதிர்த்துப் போராடினால் பிரச்சனைகள் உங்களைக் கண்டு பயப்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கையில் எடுத்த புது முயற்சியில் வெற்றி அடைவீர்கள். எதிலும் துணிச்சல் இருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். உங்களுடைய தோற்றத்திலும் அழகு வெளிப்படும். நல்லது நடக்கும் நாள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் வீடு தேடி வரும். புது வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் பெரியவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனக் குறைவு வேண்டாம்.
துலாம்
துலாம் ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற சண்டை சச்சரவுகள் பகைமை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் பொறுமையாக பேச வேண்டும். யாரையும் அனாவசியமான வார்த்தைகளைக் கொண்டு திட்டாதீர்கள். வார்த்தையில் அவசியம் கவனம் தேவை. பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்கக்கூடாது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். ஏதோ ஒரு சொல்ல முடியாத சந்தோஷம் மனதில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கை நிறைய பணம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணத்தை செலவு செய்யுங்கள். சேமிப்பை உயர்த்துங்கள் கூடுதல் நன்மையை அடையலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று உறுதியோடு இருப்பீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். உங்களுடைய இந்த விடாப்பிடியான முயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கப் போகிறது. எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடும் மன தைரியம் இன்று வெளிப்படும். கடவுளின் அனுகிரகம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டு தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை அமையப்போகிறது. எந்த இடத்தில் எல்லாம் அவமானப்பட்டீர்களோ, அந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெற்று காண்பீர்கள். வாழ்க்கையில் இந்த நாளை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். ஜெயம் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். கட்டுமான தொழில் நிறைய வருமானத்தை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் குறைவான முதலீட்டை போட்டு நிறைய லாபத்தை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். கொஞ்சம் செலவுகளை கட்டுப்படுத்திக் கொண்டால் நல்லது.
Tags:
Rasi Palan