மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் ஷாப்பிங் போகாதீங்க. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனைகள் இல்லை. முக்கியமான வேலைகளை நாளை தள்ளிப் போட்டுக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். ஆரம்பத்தில் சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வந்தாலும், இந்த நாள் போகப் போக அதிர்ஷ்டகரமான நாளாக மாறும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். எந்த இடத்திலும் துவண்டு போய் உட்காதாரிங்க. மன தைரியத்தோடு செயல்படுங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். தேவையான உதவி தேவையான நேரத்திற்கு சரியாக கிடைக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை விலகும். உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு உங்களால் முடிந்த கருணையை காட்டுங்கள். யாரையும் அதிகார தோரணையில் நடத்தாதீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் பணம் கையை வந்து சேரும். மனதில் இருந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேரத்தை வீணடிக்காதீங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனக்கவலைகள் சிந்தனைகள், நேரத்தை வீணடிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நீண்ட நாள் தொல்லை உங்களை விட்டு விலகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீட்டிற்கு விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீட்டில் அலட்சியம் வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திற்கும் அவசரப்படக்கூடாது. அடம் பிடிக்கக் கூடாது. பெரியவர்களது பேச்சை மதித்து கேட்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு இன்று பொறுமை தேவை. அவசரப்படாதீங்க. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் தொல்லை கொடுத்து வந்தவர்கள், உங்களுக்கு நண்பர்களாக மாறிவிடுவார்கள். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வரும். தேவையற்ற சண்டைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். வேலையை குறித்த நேரத்திற்கு முடித்துக் கொடுக்க வேண்டும். வியாபாரத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக்கொண்டிருக்கிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். காதலை வெளிப்படுத்துங்கள். பாசிட்டிவ் செய்தி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நன்மை நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்காதிங்க. தேவையற்ற நஷ்டங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும். எதிலும் தெளிவாக செயல்படுவீர்கள். வேலையில் உங்களை மிஞ்ச யாராலும் முடியாது. ஏட்டிக்குப் போட்டி பேசினாலும் எதிரிகளை திறமையாக சமாளிக்கும் அளவுக்கு உங்களுடைய அறிவாற்றல் வெளிப்படும் நாள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெரும் நாள் இன்று.
Tags:
Rasi Palan