யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வன்முறை கும்பல் வாள்கள் சகிதம் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன்போது வீட்டில் இருந்த தளபாடங்களை அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.