18 மாதங்கள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..!!!


ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.

ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் துணிச்சலானவர்களாக, அச்சமற்றவர்களாக இருப்பர். இப்படிப்பட்ட செவ்வாய் சுமார் 18 மாதங்களுக்கு பின் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு அக்டோபர் 23 ஆம் தேதி செல்லவுள்ளார். சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். அதுவும் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். மேலும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இப்போது செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். நல்ல பொருள் இன்பம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தே வரும். செவ்வாய் உங்கள் அதிர்ஷ்ட வீட்டின் அதிபதி. எனவே இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தரும் வகையில் இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண கடினமாக உழைப்பீர்கள். அந்த கடின உழைப்பான பலனும் உடனே கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். இதன் மூலம் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.


விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here