யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(12) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்று காலை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தவேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.