இன்றைய ராசிபலன் - 18.09.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இன்பமான அனுபவங்களை கொடுக்கக்கூடிய நாளாக இருக்க போகிறது. மகிழ்ச்சி மட்டும்தான் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் தடையோ தடங்கலோ வராது. வீட்டில் தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வருமானம் பெருகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய தருணங்கள் உங்களை வந்து சேரும். யாரெல்லாம் உங்களை பார்த்து கைநீட்டி அவமானப்படுத்தி பேசினார்களோ அவர்கள் எல்லாம் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள். உங்களுடைய அருமை பெருமைகளை புரிந்து கொள்வார்கள். நல்லது நடக்கும் நாள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேரும். வேலையில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். தவறாக புரிந்து கொண்டிருந்த உயர் அதிகாரிகள் உங்களை சரியாக புரிந்து கொள்வார்கள். உங்களுடைய திறமை வெளிப்படும் நாள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற உத்வேகம் உங்களை வாழ்க்கையில் உயர்த்தி விடும். சிக்கலான விஷயங்களை கூட சுலபமாக செய்து முடிக்கும் அளவுக்கு திறமை வெளிப்படும். வருமானம் சீராக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக தான் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சில பல பிரச்சனைகள் தடைகள் வந்து போகும். எதை கண்டும் பயப்படக்கூடாது. துணிச்சலோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் உடல் அசதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேலை பளு அதிகமாக இருக்கும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். தேவையான அளவு ஓய்வு எடுங்கள். தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முன்கோபம் வேண்டாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப அமைதியா இருப்பீங்க. நீங்கள் வந்து உங்கள் வேலை உண்டு என்று இருப்பீங்க. அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். இதனால் நல்ல பெயர் கிடைக்கும். பல பெரிய பிரச்சனை உங்களை விட்டு தானாக விலகிச் செல்லும். அமைதிக்கு பின்னால் எவ்வளவு ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்பதை உணரும் நாள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். கை நிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் ஓய்வு தேவைப்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். தேவையில்லாத வேலைகளை இழுத்துப்போட்டுக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாராட்டு மழை தான். மனது காற்றில் மிதந்து கொண்டே இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். வேலை செய்யக்கூடிய அசதி தெரியவே தெரியாது. வருமானம் சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்க இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்கள் மீது இரக்கம் காட்டுவீர்கள். அடுத்தவர்களுடைய வேலையும் சேர்த்து நீங்களே செய்து முடிப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் உண்டாகும். பயணத்தின் போது உங்களுடைய உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வது அவசியம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படும் நாள். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திப்பீர்கள். காதலை வெளிப்படுத்துவீர்கள். சந்தோஷம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். வருமானத்துக்கு ஏற்ற செலவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here