இன்றைய ராசிபலன் - 24.09.2025..!!!





மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று பக்குவத்துடன் நடந்து கொள்வீர்கள். எது நல்லது, எது கெட்டது என்று அலசி ஆராயும் அளவுக்கு உங்களுக்கு நிதானம் இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பெரிய பெரிய இழப்புகளிலிருந்து தப்பிப்பீர்கள். குலதெய்வத்தை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை எளிமையாக கற்றுக் கொள்வீர்கள். வேலையில் உங்களைத் தேடி புது பொறுப்புகள் வரும். வியாபாரத்தில் சில புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுவீர்கள். கஷ்டம் வந்தாலும் அதை சுகமாக எண்ணி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் இன்று உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் தேடி தேடி வரும். ஏதாவது ஒரு வகையில் கையில் பணம் தங்கும். செலவு சமாளிக்க ஒரு வழி பிறக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும், என்னதான் நல்லது நினைத்தாலும் உங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்களை உங்களால் தடுக்கவே முடியாது. சின்ன சின்ன எதிரிகள், உறவுகளுக்குள் சண்டை சச்சரவு இதுபோல பிரச்சனைகளை இன்று சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. கவனத்தோடு இருங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாள். முதியவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும் நிம்மதி கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியாக நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். பிரச்சனை என்று வந்தவர்களையும் கைவிடமாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டு நல்ல பெயர் வாங்குவீங்க.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சீரான நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய வேலை, உங்களுக்கான நேரத்தில் சரியாக நடக்கும். சொன்ன வாக்கை சரியாக காப்பாற்றி கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் இருக்கும். விட்டு கொடுத்து நடப்பீர்கள். குடும்பத்தை சந்தோஷமாக பார்த்துக் கொள்வீர்கள் நிம்மதி கிடைக்கும் நாள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு கை நிறைய பணம் இன்று வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் யாராவது பணம் கொடுக்காமல், உங்களை ஏமாற்றிக் கொண்டு வந்தால், அவர்களை இன்று பிடிச்சுக்கோங்க. கட்டாயம் உங்கள் பணம் உங்கள் கைக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் இருக்கட்டும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு பெயர் புகழ் அந்தஸ்தை தேடி வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். வாழ்க்கையில் என்ன செய்வது என்று, தெரியாமல் தவித்து வந்தவர்களுக்கு கூட கடவுள் இன்று ஒரு நல்ல வழியை காண்பிக்க போகின்றான். வாய்ப்பை நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்னேற இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்தால் பட்டு பட்டுன்னு முடிச்சுட்டு போயிட்டே இருப்பீங்க. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் உங்களுடைய பேச்சு அனைவரையும் உங்கள் பக்கம் கவரும். எதிரிகளால், உங்களுக்கு பிரச்சனை தருபவர்களால் உங்கள் பக்கத்தில் கூட நிற்கவே முடியாது கலக்க போறீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான நாள் இன்று, நீண்ட நாள் ஆசைகள் குறிக்கோள்கள் நிறைவேறும். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பிடித்த விஷயங்களை செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் சந்தோஷத்தை கொடுக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும், உங்களுடைய பிரச்சனை என்ன என்று தெரிந்து கொண்டு அதை சரியாக கவனித்து, பிரச்சனையை சரி செய்யும் வேலையை செய்வீங்க. இதனால் பல நாள் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here