இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ம.சசிகுமார் பதவியேற்பு..!!!


இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளராக யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த
திரு.ம.சசிகுமார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, தலைவராக மட்டக்களப்பு களுவாச்சிக் குடிமைப் சேர்ந்த சி. சசிகுமார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த(21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே குறித்த தெரிவுகள் இடம்பெற்றது.

நிதிச் செயலாளராக வடமராட்சியைச் சேர்ந்த கி. இந்திரன் தெரிவு செய்யப்பட்டதோடு, துணைத்தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த இரா.சச்சிதானந்தம், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. அன்ரன் சேவியர், யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த சசிகலா ஜெயராஜன், யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த அமலராஜ் புனிதசீலி ஆகியோரும்,
துணைப் பொதுச் செயலாளர்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த செ.சிவநடேஸ், தீவக வலயத்தைச் த.தயாபரன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஈ.என்.ஜே.ஜே. பிகிறாடோ ஆகியோரும், துணை நிதிச் செயலாளர்களாக அம்பாறையைச் சேர்ந்த க.சந்திரகாசன், மட்டக்களப்பைச் சேர்ந்த சுந்தரலிங்கம் உமாபிரியா ஆகியோரும், நிர்வாகச் செயலாளராக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். மணிவண்ணன் கல்வி கலாசார செயலாளராக தென்மராட்சி வலய நா.கேதீஸ்வரனும் பத்திரிகைச் செயலாளராக புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த தெ.சுதர்சனும், பிரசார செயலாளராக மலையகத்தைச் சேர்ந்த அ.பாலசிங்கமும் தெரிவு செய்யப்பட்டு சபை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணச் செயலாளராக
த.ஹரிகாலனும் வடமாகாணச் செயலாளராக வி.ஜெயரூபனும், ஏனைய மாகாணங்களுக்கான செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் ஆலோசகர்களாக ஈ.ஜெ. மகேந்திரா, க. நல்லதம்பி, சரா.புவனேஸ்வரன். ஆகியோர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலாக பொதுச் சபையின் அங்கீகாரத்தோடு ஒன்பது பேர் கொண்ட ஆலோசனைச் சபையும் உருவாக்கப்பட்டது.

அதில் சங்கத்தின் ஆலோசகர்கள் உள்ளடங்கலாக யாழ் பல்கலைக்கழக பேராசிரியர். நவநீதகிருஷ்ணன் கெங்காதரனும், முன்னைநாள் துணைப் பொதுச் செயலாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான பொ. அருணகிரிநாதனும், முன்னாள் கல்விப் பணிப்பாளர் யோ. ரவீந்திரனும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.என்.சுதர்ஷனும், விரிவுரையாளர் செ. சிவபாலசுந்தரும், முன்னாள் மன்னார் மாவட்டச் செயலாளர் மரியான் ஜெரால்ட் டயஸிம் தெரிவு செய்யப்பட்டனர்.
Previous Post Next Post


Put your ad code here