இன்றைய ராசிபலன் - 29.09.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாள். நல்ல விஷயங்கள் கைகூடி வரக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்திருந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம். முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மறதியின் மூலமாக பிரச்சனைகள் வரலாம்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று மன நிம்மதி நிறைந்த நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை சரியாக காப்பாற்றுவீர்கள். உங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்வீர்கள். வார்த்தையில் நிதானம் இருக்கும். பக்குவம் வெளிப்படும். நிதி நிலைமை சீராகும். லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலாக செயல்படுவீர்கள். எதிரிகளை பந்தாடுவதில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பீர்கள். உங்களைப் பார்த்தாலே அடுத்தவர்களுக்கு பயம் வந்துவிடும். அந்த அளவுக்கு துணிச்சல் வெளிப்படக்கூடிய நாள் என்ஜாய் பண்ணுவீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. பிரச்சனைகள் வரும். எதிரிகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். வேலை கைநழுவி செல்லும் அளவுக்கு கூட சில பேருக்கு பிரச்சனைகள் வரலாம். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் உண்டாகும். இருந்தாலும் மன தைரியத்தை விடாமல் இருந்தால் வெற்றி அடைவீர்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். சிந்தித்து செயல்படுவீர்கள். சிக்கலான பிரச்சனையில் இருந்து கூட சுலபமாக வெளி வருவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உயர்ந்த பொறுப்புகள் உங்களை வந்து சேரும். நிதி நிலைமை சீராக இருக்கும். செலவுக்கு ஏற்ப கையிருப்பு கையில் இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வுதான். நல்ல சாப்பாடு, நல்ல வரவேற்பு, நல்ல தூக்கம் என்று இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. வேலையிலும் வியாபாரத்திலும் உங்களை வீழ்த்த யாராலும் முடியாது. உங்களை போட்டி போட்டு ஜெயிக்கவும் முடியாது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாக கூடிய நாள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அலைச்சல் இருக்கும். வேலை பளு இருக்கும். நீண்ட தூர பயணங்களின் மூலம் பிரச்சினைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள். புதுசாக எந்த வேலையும் துவங்க வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற செலவுகள் குறைக்கப்படும். நல்ல நண்பர்களின் நட்பால், நல்ல பலனை அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். சில பேருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். வருமானம் சீராகும். குடும்ப குழப்பங்கள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் தடங்கல்கள் நீங்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எதிலும் உங்களை தாழ்த்திக் கொள்ள மாட்டீர்கள். நல்லது நடக்கும் நாள்.
Previous Post Next Post


Put your ad code here