யாழ்ப்பாணத்தில் வாடகை அறையில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென் பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வந்த வடமராட்சி, கரவெட்டி பகுதியை சேர்ந்த செ. கஜேந்திரன் (வயது 30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி பகுதியை சேர்ந்த குறித்த ஆசிரியர் யாழ். நகர் பகுதியில் வாடகை அறையொன்றில தங்கி இருந்து, பாடசாலையில் கற்பித்து வந்த நிலையில், அவருக்கு உணவு கொடுத்த நபர் , அவர் வழமை போன்று உணவு கொடுக்க சென்ற வேளை அறையினுள் ஆசிரியர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அதுதொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.