
பிறந்து 5 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த துயரச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சுவாசக்குழாயிலும், இருதயத்திலும் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக சிசு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.