யாழ்ப்பாண மாவட்டச் செயலக கட்டடத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு..!!!




யாழ்ப்பாண மாவட்டச் செயலக கட்டடத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையானது இன்றைய தினம் (01.09.2025) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

பிரதித் தபால்மா அதிபரால் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் ஞாபகார்த்த முத்திரையானது மதகுருமார்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால,
கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சுமிந்த பத்திராஜ உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.






Previous Post Next Post


Put your ad code here