ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள்..!!!


மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.



Previous Post Next Post


Put your ad code here