இரவு நேரங்களில் தூர தேசங்களுக்கு பயணிப்போர் அவதானம் ; இப்படியும் நடக்கலாம்..!!!



இலங்கையின் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனையும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சினிமா பாணியில் கொள்ளைச்சமபவங்களும் இடம்பெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இளையோர் மத்தியில் போதைப்பொருள பாவனை அதிகரித்துள்ள நிலையில், தென்னிலங்கையில் துப்பாக்கியை காட்டி மக்களை அச்சுறுத்தி போதைப்பொருளுக்கு பணம் பறித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இரவில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டதுபோல ஒரு மாயையை சித்தரித்து சினிமா பாணியில் வீதியில் ஐந்து இளைஞர்கள் விழுந்து கிடக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இரவில் பயணிப்போர் விபத்து நடந்ததென எண்ணி அவர்கள் அருகில் சென்றால் ஆபத்து உங்களுக்கே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் . இப்படியானவர்கள் கண்டால் வாகனத்தை நிறுத்தாது உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி உணமைய அறிந்துகொள்ல முயற்சியுங்கள்.

பலரும் தூரதேசங்களுக்கு பயணிப்பதற்கு இரவு நேரங்களிலேயே செல்கின்றனர். எனவே வழிப்பறி கொள்ளையர்கள தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செலய்பட வேண்டும் என சமூக ஆர்வரகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here