மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. பொறுமை தேவை. அவசரப்படாமல் ஒரு வேலையை செய்தால், அது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். அவசரப்பட்டால் இருக்கும் நல்லதும் உங்கள் கையை விட்டு நழுவி செல்ல வாய்ப்புகள் உள்ளது, ஜாக்கிரதை. மாணவர்கள் இளைஞர்கள் எல்லாம் இன்று பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல வேலைகளை கற்றுக் கொள்வீர்கள். ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன அமைதி கிடைக்கும். பெரியவர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களால் எந்த முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது. உங்களுடைய பிரச்சனை போக அடுத்தவர்களுடைய பிரச்சனையைப் பற்றி சிந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கவனமாக இருங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது வேலை, சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத பணவரவு மனதிற்கு அமைதியை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். பேச்சுக்கான இடமே இருக்காது. எல்லாம் செயல்தான். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல பாராட்டு என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். எல்லாம் ஸ்மார்ட் வொர்க்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். சுபகாரிய தடைகள் விலகும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் நஷ்டமாக இருந்த விஷயங்கள் லாபகரமாக மாறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தைரியத்தோடு இருக்க வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. எது வந்தாலும் சமாளிக்கலாம் என்ற உங்களுடைய மன தைரியம் மன உறுதி, இன்று உங்களை காப்பாற்றி விடும். கொஞ்சம் தடுமாறி சோம்பேறித்தனத்தோடு பயந்து உட்கார்ந்து விட்டால், அவ்வளவுதான். பாத்துக்கோங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிகாரர்களை பொறுத்த வரை இன்று லாபகரமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கலாம். புதிய முதலீடுகளுக்காக முயற்சி செய்யலாம். நிதி நிலைமை சீராகும். அடமானத்தில் இருந்து பொருளை மீட்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வேலைகள் சரியான நேரத்தில் நடக்காது. உடல் சோர்வு இருக்கும். தேவையற்ற டென்ஷன் உண்டாகும். சின்ன சின்ன சிரமங்கள் வந்து போகும். இருந்தாலும் பிரச்சனைகள் பெருசாக வாய்ப்புகள் இல்லை. இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. கவனத்தோடு செயல்பட்டால் நன்மை நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அசதி இருக்கும். வேலையில் முழுசாக கவனம் செலுத்த முடியாது. சில பேருக்கு மருத்துவம் சார்ந்த செலவுகள் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை. வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுமூகமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் அந்தந்த நேரத்தில் நடக்கும். உங்களுடைய பொறுமை வெளிப்படும். நிதானதோடு சிந்தித்து செயல்படுவீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டீர்கள். நீண்ட தூர பயணங்களின் மூலம் நன்மையும் நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனமகிழ்ச்சி இருக்கும். உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் பிரஷர் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் அதை நீங்க சமாளிச்சுக்குவீங்க. பெரிதாக பிரச்சனை இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
Tags:
Rasi Palan