முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இலஞ்சம் மற்று் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் நெவில் வன்னியாராச்சி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தபட்டு வருகின்றார்.
அதனையடுத்து நெவில் வன்னியாராச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news