இன்றைய ராசிபலன் - 07.10.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிறைவை பெறுவீர்கள். வீட்டில் கணவன் மனைவிக்கு வாக்குவாதம் வேண்டாம். ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுத்த நடப்பது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நன்மைகள் வரிசையாக நடக்கப்போகிறது. எந்த நன்மைக்கு சந்தோஷப்படுவது என்று தெரியாமல், திக்கு முக்காட போடுகிறீர்கள். வேலையில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். கை நிறைய பணம் சேரும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நன்மை நடக்கும். எதிரிகளால் சின்ன தொல்லை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நண்பர்களை எதிரிகளை முழுமையாக நம்பாதீர்கள் ஜாக்கிரதை.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற நஷ்டங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. நீங்கள் வெளியிடங்களுக்கு சென்றாலோ, அல்லது பணத்தை நிறைய செலவு செய்யக்கூடிய சூழ்நிலை வந்தாலும், கவனமாக இருக்க வேண்டும். புது பொருட்களை வீட்டுக்காக வாங்கும் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற மன கவலைகள் இருக்கும். எதிர்காலத்தை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். வேலையில் வியாபாரத்தில் முழுவதும் ஆர்வம் காட்ட முடியாது. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். இறைவனின் ஆசிர்வாதத்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். புது முடிவுகளை உங்களால் உடனடியாக எடுக்க முடியாது. அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் அவசரப்பட வேண்டாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். திறமை வெளிப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சும் கவனம் செலுத்தினால் போதும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. பண்டிகைக்கு பர்ச்சேஸ் துவங்கலாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். மன நிறைவோடு இருப்பீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதம் இறைவனை ஆசீர்வாதம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும் ‌

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாழ்வை சூடுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டு கிடைக்கும் நாள். வேலையில் எதிரியாக இருந்த மேல் அதிகாரிகள் கூட, நண்பர்களாக மாறுவார்கள். உங்கள் மீது விழுந்த பழி விலகும். நல்லது நடக்கும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு தேவைப்படும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எவ்வளவு பெரிய வேலை இருந்தாலும் சரி, ஆரோக்கியத்தை விட்டுக் கொடுத்து, அந்த வேலையை பார்க்காதீங்க. தூக்கம் வந்தால் தூங்குங்கள். பசித்தால் சாப்பிடுங்கள். பிறகு மற்ற வேலைகளை பார்க்கலாம். இன்று ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். எது சரி, எது தவறு வாழ்க்கைக்கு என்ன தேவை, என்ன வேண்டாம் என்பதை அலசி ஆராய்ந்து முடிவு செய்வீர்கள். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கையை புரிந்து கொள்வீர்கள். இறைவனுக்கு நன்றி செல்வங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்றும மனம் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். இறைவனின் பரிபூரண ஆசி கிடைக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். கையில் இருக்கும் பணம்தான் கொஞ்சம் கரையும். இருந்தாலும் பெருசாக பிரச்சினை வராது. சமாளித்துக் கொள்வீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here