கடந்த சுமார் 50 வருடங்களில் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாதளவு உயர்ந்துள்ளது.
உலகளவில் இன்று ஒரு அவுன்ஸ் தங்க விலை $ 3,945 டொலரை எட்டிய நிலையில் இன்று மாலைக்குள் ஒரு அவுன்ஸ் $4,000 ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி (Silver) இப்போது $48 இல் $50 ஐ நோக்கிச் செல்கிறது.
சென்னையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ரூ.11,060க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.880 உயர்ந்துள்ளது.
இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.88,480க்கு (இலங்கை பெறுமதியில் Rs.301956.58 )விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று கொழும்பில் 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை சுமார் ரூ.3,02,240 ஆகும். இது நேற்று இருந்த விலையான ரூ.3,01,680-ஐ விட சற்று அதிகமாகும்.
கொழும்பில் ஒரு கிராம் தங்கம்: ரூ.37,780
ஒரு சவரன் தங்கம் (8 கிராம்): ரூ.3,02,240
நேற்றைய விலை: ரூ.3,01,680
கடந்த காலங்களில் உலகளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலைகள்
2015: $1,160
2016: $1,250
2017: $1,257
2018: $1,269
2019: $1,393
2020: $1,770
2021: $1,799
2022: $1,800
2023: $1,943
2024 (YTD): $2,405
2025 Current spot: $3,945
Almashoora