இன்றைய ராசிபலன் - 11.10.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். நீண்ட நாள் வராத பணம் கையை வந்து சேரும். மன நிம்மதியை அடைவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். எந்த சூழ்நிலையிலும் இன்று பொய் சொல்லி தப்பிக்க பார்க்காதீர்கள். உண்மையை சொல்லும் பட்சத்தில் உங்களுடைய நல்ல பெயர் நீடித்து இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் உயரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் சீரான போக்கு நிலவும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப் கைக்கூடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட தூர பயணங்களை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. வீண் செலவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கான பெயர் புகழ் அந்தஸ்து உங்களை தேடி வரும். உங்களுடைய விடா முயற்சி ஒருபோதும் வீண் போகாது. கஷ்டப்பட்டதற்கு உண்டான பலனை கடவுள் என்று உங்களுக்கு கொடுப்பாரு. மன நிறைவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானமாக இருக்க வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. முன்கோபடக் கூடாது. தெரியாத விஷயத்தில் கால் வைக்கக்கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள் மனதை ஒரு நிலையாக வைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் வரும். வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் பஞ்சாயத்துகளில் சிக்க கூடிய சூழ்நிலை உண்டாகலாம். ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். புது மனிதர்களை முழுசாக நம்பாதீங்க. குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் சொல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. அவசரம் வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும், சிந்தித்து செயல்படுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் சண்டை போடாதீங்க. குறிப்பாக இளைஞர்கள் இன்று பெரியவர்களது பேச்சை கேட்க வேண்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஏமாற்றம் வர வாய்ப்பு உள்ளது. அதிகமா எந்த விஷயத்திலும் எதிர்பார்க்காதீங்க. உங்களுக்கான நல்லது உங்களுக்கு வரும். உங்களை கைவிட்டுப் போகும் விஷயங்கள் உங்களுக்கு கெடுதல் செய்யக் கூடியவை என்று நினைத்துக் கொள்ளுங்கள். நடந்ததை எண்ணி வருத்தப்பட்டு நேரத்தை வீணடிக்காதீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். பண்டிகையை கொண்டாட ஷாப்பிங் செய்வீங்க. சந்தோஷமா இருப்பீங்க. சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். சந்தோஷம் இரட்டிப்பாகும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் தெளிவாக இருப்பீர்கள். அடுத்தவர்கள் பேச்சை கேட்டு குழம்ப மாட்டீங்க. உங்களுடைய திறமை வெளிப்படும் நாள். பாராட்டு கிடைக்கும் நாள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். என்ஜாய் பண்ணுங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் ஒரு வாரத்திற்கும் சேர்த்து இன்றைக்கு உழைக்கப் போறீங்க. உங்களுடைய இந்த நாள் சுறுசுறுப்பாக இருக்கும். சாப்பிட்டு தண்ணீர் குடிக்க கூட நேரம் இருக்காது. ஆரோக்கியத்தையும் ஒரு பக்கம் கவனியுங்கள். வேலையில் நிச்சயம் உங்களுக்குத் தான் நல்ல பெயர். வருமானம் சீராகும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று வேகத்தை விட விவேகத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய திறமையை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு நல்லது நடக்கும். பாராட்டு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சாதுரிய பேச்சு தந்திரமான சிந்தனை, உங்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலத்திற்கு எடுத்துச் செல்லும் வாழ்த்துக்கள்.
Previous Post Next Post


Put your ad code here