30 ஆண்டுகளுக்கு பின் சனி சுக்கிரனால் உருவாகும் சமசப்தம யோகம்: இந்த 3 ராசிகளின் கையில் பணம் குவியப்போகுது..!!!


வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் சேர்த்து சுப மற்றும் ராஜயோகங்களையும் அடிக்கடி உருவாக்குகின்றன. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கலாம்.

அந்த வகையில் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் சேர்ந்து அக்டோபர் 11 ஆம் தேதி சமசப்தம யோகத்தை உருவாக்கவுள்ளனர். அதுவும் இந்த யோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

இருப்பினும் இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப்போகிறது. அதுவும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நிலையில் நல்ல உயர்வையும் காணவுள்ளனர். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது. இப்போது சனி சுக்கிரனால் உருவாகும் சமசப்தம யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிரனால் உருவாகும் சமசப்தம யோகத்தால் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிரனால் உருவாகும் சமசப்தம யோகத்தால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அரசு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்தியைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிரனால் உருவாகும் சமசப்தம யோகத்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் ஏற்கனவே செய்த முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
Previous Post Next Post


Put your ad code here