மேஷ ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய நாள். புது முயற்சிகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டும். அனுபவசாலிகள் பேச்சை தட்டக்கூடாது. ஜாக்கிரதை, அடம்பிடித்து இளைஞர்கள் எந்த வேலையும் செய்யாதீங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தேவையில்லாத கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் உள்ளது. உடல் சோர்வு வீண் விரைய செலவுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று திறமைசாலிகளாக செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று காலை நேரத்தில் தேவையற்ற மன பயம் இருக்கும். ஆனால் போகப் போக உங்களுடைய சுறுசுறுப்பை பார்த்து நீங்களே வியப்படைவீர்கள்.மன பயத்தை ஒதுக்கிவிட்டு கொஞ்சம் முயற்சியை மட்டும் மேற்கொண்டால் போதும். முழு வெற்றி உங்களை வந்து சேரும். எதற்கும் பயப்படாதீங்க நேர்மையாய் இருங்க நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான பணம் கையிருப்பு இருக்கும். தீபாவளி ஷாப்பிங் சந்தோஷமா பண்ணலாம். மன நிறைவான நாள். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் குறையும் நாள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஒற்றை காலில் நிற்கப் போகிறீர்கள். நீங்கள் சொல்வதுதான் சரி என்று விதாண்டா வாதம் பேசுவீர்கள். இதனால் சில பல பிரச்சனைகள் சில எதிரிகளை உருவாக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை அமையும். கவனமாக இருக்க வேண்டும். பொறுமை வேண்டும் முன்கோபம் கூடாது. புது முடிவுகளை நாளை தள்ளி போடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய பெருமைகளை தாராளமாக பேசிக்கொள்ளலாம். யாரெல்லாம் உங்களை அவமானப்படுத்தி கீழ் தரமாக நடத்தினார்களோ, அவர்களை எல்லாம் பார்த்து சவால் விட்டு பேசலாம். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமான சந்தோஷமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இழந்த பொருள் மரியாதை அனைத்தையும் திரும்பவும் மீட்டு எடுத்து விடுவீர்கள். நீண்ட தூர பயணங்களும் நல்லபடியாக அமையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக இருப்பீங்க. புதுப்புது நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டே இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். நிறைய லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். கையில் இருக்கும் பணம் கொஞ்சம் செலவாகும். பண்டிகைக்கு என்ன செய்வது என்று யோசனை சில பேருக்கு இருக்கும். இருந்தாலும் கடவுள் உங்களை கைவிடமாட்டான். தேவையான பணம் தானாக வந்து சேரும். குழப்பத்தை விட்டு விட்டு வேலையிலும் வியாபாரத்திலும் மட்டும் கவனம் செலுத்துங்கள் போதும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் நேரத்திற்கு நடக்கும். கடமைகளை சரியாக முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகலாம். நிதிநிலைமை சீராகும். வாரா கடன் வசூல் ஆகும் சந்தோஷம் பெருகும்.
Tags:
Rasi Palan