500 ஆண்டுகள் கழித்து தீபாவளியில் உருவாகும் வைபவ் லட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்..!!!


இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த தீபாவளி நாளில் பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. முக்கியமாக இந்த தீபாவளி நாளில் சந்திரன் கன்னி ராசிக்கு செல்லவுள்ளார். இந்த கன்னி ராசியில் செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் உள்ளார். இதனால் கன்னி ராசியில் சந்திரன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த கிரக சேர்க்கையின் காரணமாக வைபவ் லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் தீபாவளி நாளில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு வெளிநாடு செல்லும் கனவும் நனவாகும் வாய்ப்புள்ளது. இப்போது தீபாவளி நாளில் உருவாகும் வைபவ் லட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ் லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உறவுகள் வலுவடையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல துணை அமையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ் லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.


கும்பம்

கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ் லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் வருமானம் மற்றும் முதலீடு வீட்டில் உருவாகிறது. ஆகவே இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் இருந்து எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
Previous Post Next Post


Put your ad code here