இன்றைய ராசிபலன் - 18.10.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. தேவையற்ற சண்டை சச்சரவுகளை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள். துணிச்சலோடு இருக்க வேண்டும். அதே சமயம் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். பண்டிகையை கொண்டாட தேவையான பணம் கிடைத்துவிடும். பெற்றவர்களுடைய மனது குளிரும். தேவையற்ற பிரச்சனைகள் விலகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு கை கொடுப்பீர்கள். மனநிறைவு அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும் சந்தோஷம் பெருகும். நிதிநிலைமை சீராகும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கப் போகிறது. நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுறுசுறுப்பு இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட நிறைய லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வீண் விரைய செலவுகள் குறையும். சுப செலவுகள் உண்டாகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். நீண்ட நாள் கவலையிலிருந்து விடுபடுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை அடைவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். சுறுசுறுப்பாக பம்பரம் போல, சுழன்று உங்களுடைய பொறுப்புகளை எல்லாம் சரியாக செய்து முடித்துவிட்டு, பண்டிகையை கொண்டாட தயாராகி விடுவீர்கள். நல்ல நேரம் கை கூடி வரும். கெடுதல் உங்களை விட்டு தானாக விலகி நிற்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைக்காதீர்கள். பிறகு வார இறுதியில் வேலை பளு கூடிவிடும். பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது, பண்டிகையை கொண்டாட சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதனால யோசிச்சு, இன்றைக்கான வேலையை இன்றே முடிப்பது தான் நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுபமான நாளாக இருக்கும். வீட்டில் நல்லது நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். நேரம் போவதே தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கைநிறைய லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். புது வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்டு மகிழ்வீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நிதானத்தோடு இருந்தால், எல்லாம் நல்லது தான். கோபப்படும் போது நல்ல விஷயங்களை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக வேலை வியாபாரத்தில் எந்த அவசரமும் வேண்டாம். தெரியாத வேலையில் கால் வைக்காதீங்க. மூன்றாவது புது மனிதர்களை முழுசா நம்பாதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். தேவையற்ற சந்தேகங்கள் விலகும். மன நிம்மதி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களும் நல்ல படியாக நடக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தவும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். பண வரவு இருக்கும். பண்டிகையை கொண்டாட தயாராகி விடுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். நீண்ட தூர பயணங்கள் இனிதே நிறைவேறும். பிள்ளைகளுடைய மகிழ்ச்சியில் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க. உறவுகளோடு பேசும்போது மட்டும் கவனம் தேவை.
Previous Post Next Post


Put your ad code here