யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு நூதன திருடன் ..!!!



சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் காவல்துறையினர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

குறித்த நபர் திருடுவதற்கு தயாராகும் ஊரில் வாடகைக்கு ஒரு வீட்டினை எடுத்து தங்கி நின்று, தான் திருடவுள்ள வீட்டை முழுமையாக நோட்டமிட்ட பின்னர் அந்த வீட்டை விட்டு வெளியேறி சில நாட்களின் பின்னர் திருட்டில் ஈடுபட்டு வந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

இது அவரது வழமையான செயற்பாடு என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here