செவ்வாயும்-புதனும் தீபாவளியன்று ஒரே ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரர்கள் வெற்றிகளை குவிக்க போகிறார்களாம்..!!!


ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த கிரக இயக்கங்கள் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நகர்வின் போது சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைகிறது. இப்படி கிரகங்கள் இணையும் போது அது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

தற்போது கிரகங்களின் இளவரசரான புதனும், கிரகங்களின் தளபதியுமான செவ்வாயும் ஒன்றாக இணையப் போகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் புதனும், செவ்வாயும் எதிரெதிர் கிரகங்களாகக் கருதப்படுகின்றன, இருப்பினும் அவற்றின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கப்போகிறது. அக்டோபர் 20, 2025 அதாவது தீபாவளி நாளில் இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் விருச்சிக ராசியில் இணைகின்றன, இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் 3 ராசிக்காரர்கள் இதனால் ஜாக்பாட் அடிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் அக்டோபர் 20 ஆம் தேதி புதன்-செவ்வாய் இணைவு ஏற்படுவதால் விருச்சிக ராசிக்காரர்கள் பல்வேறு நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை இப்போது பலமடங்கு அதிகரிக்கும், மேலும் அவர்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பமாக மேம்படும். அவர்களின் யோசனைகள் அங்கீகாரம் பெற வாய்ப்புள்ளதால், நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க இது சரியான நேரமாக இருக்கும்.

இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் தங்கள் தொழிலை மிகவும் பெரிதாக வளர்த்தெடுக்கலாம். நிதி நிலைமை சீராக இருக்கும் மற்றும் செலவுகளை சீராக சமாளிக்க முடியும். பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களிலிருந்து அவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், இது சாதகமான பலன்களைத் தரும்.


கடகம்

அக்டோபர் 20 ஆம் தேதி புதன்-செவ்வாய் இணைப்பு கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காத நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் வழக்கத்தை விட எளிதாக அதிக பணம் சம்பாதிக்கலாம் மற்றும் அவர்களின் நிதி நிலையையும், சேமிப்பையும் அதிகரிக்கலாம். இதனுடன், சமூகத்தில் அவர்களின் செல்வாக்கு மற்றும் கௌரவம் அதிகரிக்கும். அவர்களின் பேச்சு மற்றும் வார்த்தைகள் சமூகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படும்.

வர்த்தகர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பயனடையலாம். முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கலாம், மேலும் அவர்கள் கடனாகக் கொடுத்த பணத்தை எளிதில் திரும்பப் பேரலை. அவர்களின் சக்திவாய்ந்த பேச்சால் அலுவலகத்தில் அவர்களின் அதிகாரத்தை உறுதிசெய்யலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, அக்டோபர் 20 ஆம் தேதி நடக்கப்போகும் புதன்-செவ்வாய் இணைவு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இந்த கிரக இணைப்பு குடும்பத்தில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் வேலையில் அவர்களின் முடிவெடுக்கும் திறன்களை வலுப்படுத்துகிறது. இந்த காலகட்டத்தில், அவர்கள் திடீர் பண ஆதாயங்களை அனுபவிக்கக்கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள்.

இந்த நேரத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும், மேலும் அவர்கள் பணத்தை வெற்றிகரமாக சேமிக்க முடியும். தொழில் வாழ்க்கையில், இந்த கிரக இணைப்பால் அவர்கள் பெரிய உயரத்தை அடையலாம்.
Previous Post Next Post


Put your ad code here