இலங்கையில் தொடர்ந்து அதிகரிப்பை பதிவு செய்து நான்கு லட்சத்தை எட்டிய தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, இன்று (18) காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் '22 கரட்' ஒரு பவுண் தங்கத்தின் விலை 358,000 ரூபாவாக குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் நேற்று நாட்டில் 22 கரட்' ஒரு பவுண் தங்கத்தின் விலை 376,000 ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை, நேற்று (17) 410,000 ரூபாவாக இருந்த '24 கரட்' ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 390,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.