மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியாக நிறைய நல்லது நடக்கும். இறைவழிபாடு செய்வதில் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சுப காரிய தடைகள் விலகும். வீட்டில் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களில் போது மனது நிம்மதி அடையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். நீண்ட நாள் வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பரிசுகள் கிடைப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. இன்று லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். இறைவழிபாடு செய்யுங்கள். நேர்வழியில் நடந்தால் எந்த பிரச்சனைக்கும் பயந்து நடுங்க வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகை வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. உயர் அதிகாரிகளிடமும் பார்ட்னரிடமோ அதிகமாக பேசாதீங்க. வாக்குவாதம் செய்யாதீங்க. என்ன பிரச்சனை நடந்தாலும் தலையை மட்டும் ஆட்டிக் கொள்ளுங்கள். சரி சரி என்ற வார்த்தைக்கு மேலே ஒரு வார்த்தையும் பேசக்கூடாது கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரி தொல்லையிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாராட்டு மழை தான். நீங்கள் செய்யாத வேலைக்கு கூட பாராட்டு உங்களைத் தேடி வரும். புகழ் உங்களை தேடி வரும். நல்லது நடக்கும் நாள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். சொத்து பிரச்சனைகள் தீரும். சந்தோஷத்தோடு இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை கூட நீங்கள் சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். உங்களுக்கான நல்ல பெயர் கிடைக்கும். நான்கு பேர் மத்தியில் உங்கள் கை ஓங்கி நிற்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய முதலீடுகளின் மூலம் நிறைய லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். வேலைகள் எல்லாம் அந்தந்த நேரத்திற்கு முடியும். நல்ல ஓய்வு எடுப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் தெளிவாக ஒரு முடிவை எடுப்பீர்கள். நிதிநிலைமை சீராகும் கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். சொத்து சுகமாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. உற்சாகத்திற்கு குறைவிருக்காது. வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரும். இன்றைய நாள் சில பல பிரச்சனைகளோடு சேர்ந்து நல்ல அனுபவங்களை உங்களுக்கு கொடுக்க போகிறது. தடைகளை கண்டோ, தடங்கல்களை கண்டோ பயந்து ஒதுங்க கூடாது. விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும். இந்த நாள் இறுதியில் தடைகளை தாண்டி சாதிக்க கூடிய வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்களை வீட்டில் மீண்டும் துவங்கலாம். அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனம் தேவை. வீட்டில் இருக்கும் பெண்கள் கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பேச்சு திறமை வெளிப்படும். நடக்கவே நடக்காத விஷயத்தை கூட பேசி பேசி நடக்க வச்சிருவீங்க. குறிப்பாக கலைஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள் சொற்பொழிவாளர்கள், இவர்களுக்கு இன்று நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். சேல்ஸ்மேன் வேலையில் இருப்பவர்களும் இன்று சாதிப்பீர்கள்.
Tags:
Rasi Palan