யாழில். புத்தம்புதிய காரில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் வர்த்தகர் கைது..!!!


யாழ்ப்பாணத்தில் புத்தம் புதிய காரில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் புதிதாக வாங்கிய புத்தம் புதிய கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் நிற்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைத்த புலனாய்வு பிரிவினர் , காரில் இருந்த கார் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கிய நிலையில், பொலிஸார் காரினை சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது காரினுள் இருந்து 11 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து காரின் உரிமையாளரை கைது செய்த பொலிஸார் காரையும் மீட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கார் புதிதாக வாங்கி , அது மோட்டார் திணைக்களத்தில் பதிவு செய்து அதற்கான இலக்கங்கள் கூட வழங்கப்படாத நாட்களுக்குள் புதிய காரில் ஹெரோயின் விற்பனையில் குறித்த சந்தேகநபர் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here