யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபாய் மோசடி..!!!


வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினைப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் 4 முறைப்பாடுகளும், வவுனியாவில் 4 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர்.

கைது செய்து விசாரணைகளின் பின்னர் நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here