இன்றைய ராசிபலன் - 31.10.2025..!!!

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பரிசு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். இறை வழிபாடு மனத்திற்கு அமைதியை தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கை நிறைய பணம் கிடைக்கும். மகாலட்சுமி அம்சம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் நீங்கும். மன நிறைவான நாளாக இருக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றிக்காண கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியின் நல்ல முன்னேற்றம் இருக்கும். பலமுறை முயற்சி செய்து தோல்வி அடைந்து, துவண்டு போனவர்கள் இன்றைய நாளில் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் சக்சஸ் உங்களுக்குத்தான்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் வழக்கம் போல நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும். கேட்காத உதவியும் சரியான நேரத்தில் கிடைக்கும். பெருசாக பிரச்சனை இருக்காது. நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். நிதி நிலைமை மேலோங்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ரொம்பவும் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதிகமான கோபம், அதிகமான வேலை பளு, உடல் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டிய நாள். வேண்டாதவர்களிடமிருந்து ஒதுங்கியே இருங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலையை மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத நஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இறைவழிபாடு செய்யுங்கள். பிரச்சனையில் இருந்து சுலபமாக தப்பிக்க வழி கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மீட்டிங் போகணும், ஏதாவது ப்ராஜெக்ட் செய்யணும் அப்படின்றவங்க எல்லாம் கவனமா இருந்துக்கோங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை மீட்பதற்கு உண்டான முயற்சிகளை செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத குழப்பங்கள் அவ்வப்போது வந்து போகும். புது முடிவுகள் எடுப்பதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபர் பேச்சை கண் மூடி தனமாக நம்ப கூடாது. யாரை நம்பியும் பணத்தை அனாவசியமாக கொடுக்காதீங்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக கையாளுங்கள். நம்பிய இடத்தில் ஏமாற வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களை நினைத்து சங்கடப்படக்கூடாது. தேவையில்லாத விஷயங்களுக்கு மனதை அலைபாய விடக்கூடாது. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அரசுக்கு புறம்பாக எந்த ஒரு வேலையும் செய்யாதீர்கள். குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். மனதில் பிளான் செய்து வைத்திருந்த வேலைகளை எல்லாம் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உற்சாகம் பிறக்கும் நாள். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள்.
Previous Post Next Post


Put your ad code here