ஜோதிட சாஸ்திரத்தில் துலாம் மிகவும் முக்கியமான கிரகமாகும். சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். இந்த நிலையில் நவம்பர் 02, 2025 அன்று பிற்பகல் 13:5 மணிக்கு துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். ஜோதிடத்தில் சுக்கிரன் அன்பு, அழகு, ஆடம்பரம், இன்பங்கள் மற்றும் உறவுகள் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு நன்மை பயக்கும் கிரகமாகக் கருதப்படுகிறது.
சுக்கிரன் துலாம் ராசியின் அதிபதியாக இருக்கிறார். எனவே சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு பயணிக்கும் போது சில ராசிக்காரர்களுக்கு அது பொற்காலத்தை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அதிர்ஷ்டத்தையும், ஏறுமுகத்தையும் அளிக்கப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியாக இருக்கிறார். இப்போது சுக்கிரன் மேஷ ராசியில் 7வது வீட்டில் இருப்பார். இந்த பெயர்ச்சியால் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணம் சம்பாதிக்க அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பழைய மற்றும் புதிய முதலீடுகள் மூலம் பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும், அவர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம் மற்றும் அங்கீகாரத்தைப் பெறலாம்.
இந்த மாதத்தில் அவர்களின் காதல் வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், மேலும் தங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். வணிகர்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, கடினமான பேச்சுவார்த்தைகள் மூலம் பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் மற்றும் ஆறாவது வீடுகளின் அதிபதியாக சுக்கிரன் இருக்கிறார். தற்போது சுக்கிரன் ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். அவர்களின் புதுமையான அணுகுமுறை வேலையில் வெற்றிபெற உதவும், மேலும் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வேலை மற்றும் வணிகத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். அவர்கள் துணையிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அல்லது புதிய திட்டத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ரிஷப ராசிக்காரர்கள் எளிய தீர்வுகள் மூலம் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியும், மேலும் மற்றவர்களை தங்கள் பேச்சால் கவர முடியும். எளிதான நகர்வுகள் மூலம் நீங்கள் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கலாம் மற்றும் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் மூன்றாவது மற்றும் பத்தாம் வீடுகளின் அதிபதியாக உள்ள சுக்கிரன் தற்போது மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த பெயர்ச்சியால் அவர்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றத்தையும், நேர்மறையான மாற்றங்களையும் அனுபவிப்பார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.
மேலதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் அவர்களின் கடின முயற்சி மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். உங்கள் கடந்த கால வேலைகள் இப்போது சிறந்த பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் சில பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன, மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் பதினொன்றாவது மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் தற்போது பதினொன்றாவது வீட்டில் வசிக்கிறார். இந்த காலத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரிய வெற்றியைக் கொடுக்கும், மேலும் அனைத்து வேலைகளையும் சிறப்பாக கையாள முடியும். இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயங்கள் தேடிவரும்.
தனுசு ராசி வியாபாரிகளுக்கு இது மகிழ்ச்சியான காலமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் முதலீட்டை விட இரண்டு மடங்கு திரும்பப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது ஒரு சாதகமான நேரம். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் ஒன்பதாவது மற்றும் நான்காவது வீட்டின் அதிபதியாக சுக்கிரன் இருக்கிறார், தற்போது கும்ப ராசியின் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். அவர்கள் கடந்த காலத்தின் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வரலாம். வேலை மற்றும் பதவியில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை இப்போது வெற்றிகரமாக முடிக்க முடியும், மேலும் பல்வேறு முதலீடுகளிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும்.
வியாபாரிகள் தங்கள் தொழிலை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். நிதி நிலைமை சீராக இருக்கும் மற்றும் செலவுகளை சீராக சமாளிக்க முடியும். பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களிலிருந்து அவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், இது சாதகமான பலன்களைத் தரும்.
Tags:
Rasi Palan
