
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission of Sri Lanka - PUCSL மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமலிருக்க தீர்மானித்துள்ளது.
மின்சார சபையினால் (Ceylon Electricity Board ) முன்வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கட்டண அதிகரிப்புக் கோரிக்கையை ஆராய்ந்த பின்னர், நுகர்வோருக்குச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்தக் கட்டண அதிகரிப்பை நிராகரித்து, தற்போதைய கட்டணத்தை மாறாமல் வைத்திருக்க இலங்கை பொதுப்பாயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு எடுத்துள்ளது.
இந்தத் தீர்மானம் தற்போதைய பொருளாதார நிலைமையில் பொதுமக்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.