உயிரை மாய்க்க முயன்ற யுவதி ஒருவர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த யுவதி மன விரக்தி காரணமாக கடந்த 14 ஆம் திகதி இரவு தூக்கிட்டுள்ளார். தூக்கில் இருந்து மீட்டு அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Tags:
sri lanka news